2025 மே 23, வெள்ளிக்கிழமை

மின்சாரம் தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 செப்டெம்பர் 11 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி கடற்கரை வீதியில் 33,000 சக்தி வாய்ந்த மின்சாரக் கம்பியில், இரும்புக்கம்பி ஒன்று விழுந்ததில் ஒருவர் அதிர்ச்சிக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.  

 

 சனிக்கிழமை (09) காத்தான்குடி கடற்கரை வீதியில், கட்டடமொன்றில் கட்டிட நிர்மான வேலைகளில் மேசன் தொழிலாளிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அந்தக் கட்டட நிர்மான வேலைகளுக்காக பயன்படுத்திய இரும்புக்கம்பிகள் அந்தக் கட்டடத்துக்கு அருகாமையில் செல்லும் 33,000 சக்தி வாய்ந்த மின்சாரக் கம்பியில் விழுந்ததில் ஒருவர் அதிர்ச்சிக்குள்ளாகி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

 இதையடுத்து, குறித்த இடத்துக்கு விரைந்த பொலிசார், சம்பவத்தை விசாரணை செய்ததுடன், கட்டட நிர்மான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒன்பது பேரைக் காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்து, வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X