Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூரியவெவ கிராமத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றுக்குள் உட்புகுந்த காட்டு யானையொன்று, மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலியில் சிக்கி, ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளதாக, சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை (30) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சுமார் 30 வயதுடைய தனியன் காட்டுயானை ஒன்றே உயிரிழந்துள்ளதாக, வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வீட்டுத் தோட்ட வேலிக்கு மின்சாரம் பாய்ச்சிய விவசாயியை, பொலிஸார் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, இங்குள்ள விவசாயிகளின் வீட்டுத் தோட்டங்கள் தொடர்ச்சியாக காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .