Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் கையொப்பமிட்ட பதாதை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.அஸீஸிடம், இன்றுக்(14) கையளிக்கப்பட்டது.
மியான்மார், ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் மியான்மார் நாட்டு அரசாங்கத்தை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு, ஐக்கிய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, இக்கையொப்பங்கள் இடப்பட்டன.
இந்த பதாதையை, காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன், செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, பொருளாளர் எஸ.ஏ.கே.பழீலுர் ரஹ்மான், உப செயலாளர் எம்.எஸ்.எம்.சஜீ ஆகியோர் கையளித்தனர்.
இதனைப் பெற்றுக்கொண்ட இணைப்பாளர் அஸீஸ், இப்பதாதையை கொழும்பிலுள்ள தமது தலைமைக்காரியாலயத்துக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
9 hours ago