2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மீனவர்களுக்கு தெளிவுபடுத்தல்

Princiya Dixci   / 2020 நவம்பர் 24 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக, வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுத்தப்பட்ட நிலையில், மீனவர்கள் தொழிலுக்குச் செல்லும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட கூட்டம், வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாசலில் இன்று (24) நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.அஷ்ரப் தலைமையில், சமூக இடைவெளி பேணி நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர்முஹம்மது, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக முகாமையாளர் ஜோர்ஜ் றெஜினோல்ட் விஜிதரன், மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில்  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்கள், மீண்டும் தொழிலுக்குச் செல்வதற்கு அனுமதி கிடைக்கும் வகையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் தொடர்பில் இங்கு விளக்கமளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .