Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறவில்லையென, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக, சமூக ஊடகங்கங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக ஹிஸ்புல்லாஹ்வைத் தொடர்புகொண்டு கேட்ட போது, இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும், இது அப்பட்டமான பொய்யாகும் என்றும் தெரிவித்தார்.
தன் மீது சேறு பூசுவதற்காக, சில விஷமிகளால் இந்தச் செய்தி பரப்பப்பட்டுவருவதாகவும் இதனால் யாரும் குழப்பமடைய தேவையில்லை எனவும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago