Princiya Dixci / 2020 நவம்பர் 29 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகரில் முகக் கவசம் அணியாது வீதிகளிலும் கடைத்தெருக்களிலும் சஞ்சரித்தோர்மீது சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஏறாவூர் பொலிஸ், ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, ஏறாவூர் நகர வர்த்தகர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இன்று (29) இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
இந்த நடவடிக்கையின்போது வீதியிலும் கடைத்தெருக்களிலும் முகக் கவசம் அணியாது அல்லது முகக் கவசத்தை கொரோனா வைரஸ் பரவாத உரிய பாதுகாப்பு முறைப்படி அணியாது நடமாடியோரை, நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் வண்ணம் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
12 பேர் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ள அதேவேளை, அவர்கள் நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago