2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

முகக்கவசம் அணியாத 15 பேருக்கு அபராதம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 25 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்புத் தொடர்பான கட்டளைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முகக் கவசம் அணியாத 15 பேருக்கு, தலா 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு - கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பிரிவில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் தேடுதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டபோது, நீதவான் நீதிமனற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான், ஒவ்வொருவருக்கும்  தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

இவ்வாறான அசௌகரியங்களைத் தவிர்த்து, பொது இடங்களுக்குச் செல்லும்போது பொது மக்கள் முகக் கவசங்களை அணிந்து செல்லுமாறு, மட்டக்களப்பு சுகாதார பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X