Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூலை 12 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
முன்பிள்ளை பருவ அபிவிருத்தி நிலையம், பகல் பராமரிப்பு வசதிகளை கொண்ட பராமரிப்பு நிலையத்துக்கான அடிகல் நாட்டும் நிகழ்வு, மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் இன்று (12) நடைபெற்றது.
மகளிர் சிறுவர் அலுவல்கள், சமூக பாதுகாப்பு அமைச்சின் ஊடாக, உலக வங்கியின் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ், இந்நிலையம் நிர்மாணிக்கப்படுகின்றது.
உலக வங்கியின் 8.2 மில்லியன் ரூபாய் நிதி உதவியுடன், மண்முனை பற்று, ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவில் நிர்மாணிக்கப்படுகின்ற இதன் கட்டத்துக்கான அடிக்கல்லை, மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, நாட்டி வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளை பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வி.முரளிதரனின் ஒழுங்கமைப்பில், மண்முனை பற்று, ஆரையம்பதி பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமச்சிவாயம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago