2025 மே 19, திங்கட்கிழமை

முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு தராசு சின்னத்தில் போட்டி

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி நகர சபை தேர்தலில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் சின்னமான தராசு சின்னத்தில் போட்டியிடுகின்றது.

 

இதற்கான வேட்புமனுப்பத்திரம் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பினால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (21) தாக்கல் செய்யப்பட்டது.

 

காத்தான்குடி நகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து யானைச்சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிடையில் ஏற்பட்ட வேட்பாளர் போடும் முறன்பாட்டினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறுதி நேரத்தில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட தீர்மானித்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை செலுத்த தவறியதாலேயே முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வேண்டிய நிலை முஸ்லிம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X