Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியின் மூன்று இடங்களில் சனிக்கிழமை (23) மாலை இடம்பெற்ற வாகன விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், இருவர் காயமடைந்தனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மாவடிவேம்பு, கோரகல்லிமடு மற்றும் ஆறுமுகத்தான்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் இவ்விபத்துகள் இடம்பெற்றுள்ளதென, ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவடிவேம்பு பிரதேசத்தில் துவிச்சக்கரவண்டியில் சவாரிசெய்த வயோதிபர் ஒருவர், பிரதான வீதியைக் குறுக்கிட்டபோது, அதேதிசையில் வந்த வான் மோதியதில் 68 வயதுடைய செல்வமணி சிவரத்தினம் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த வான் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கோரகல்லிமடு பிரதேசத்தில் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் பஸ்ஸின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 24 வயதுடைய நாகராஜா கோகுலராஜ் என்ற இளைஞர் பலியானார். மற்றுமொருவர் காயமடைந்தார்.
இதற்கிடையே ஏறாவூர், ஆறுமுகத்தான்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய காத்தான்குடியைச் சேர்ந்த 19 வயதுடைய எஸ்.ஏ. முனிப் அஹமட் என்பவரே மரணமடைந்தவராவார்.
பிரதான வீதியால் இருவர் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்குவந்த ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் மோதியதையடுத்து, பிரதான வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் தூக்கிவீசப்பட்டுள்ளார். இவரை மற்றுமொரு வாகனம் மிதித்துள்ளது.
இவ்விபத்துடன் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சாரதியுடன் லொறியும் பொலிஸாரால் மீட்கப்பட்;டபோதிலும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
இச்சம்பவங்களில் மரணமடைந்தவர்களது மூன்று சடலங்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஏறாவூர்ப் பொலிஸார், இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .