2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

யானை தாக்கி சிறுமி பலி; தந்தை காயம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 02 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கற்பக்கேணிக் கிராமத்தில் புதன்கிழமை (01) மாலை யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சிறுமி ஒருவர் பலியாகியுள்ளதுடன், அவரது தந்தை படுகாயமடைந்துள்ளார்.

இராசாதுரை றோஜினி (வயது 6) என்ற சிறுமி பலியாகியுள்ள அதேவேளை, அவரது தந்தையான கதிர்காமத்தம்பி இராஜதுரை (வயது 45) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

இவர்கள் இருவரும் தங்களின் வீட்டிலிருந்து சற்றுத் தூரத்திலுள்ள உறவினர் வீடு ஒன்றுக்குச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர். இதன்போது, இவர்களின் வீட்டுக் அருகிலிருந்த பற்றையில் மறைந்திருந்த யானை இவர்களைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   

இதனை அடுத்து, மண்பத்தடி பிரதேச வைத்தியசாலையில் இவர்கள் இருவரும் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X