2025 மே 02, வெள்ளிக்கிழமை

யாத்திரை சென்ற பெண் யானை தாக்குதலுக்கு இலக்காகி மரணம்

Freelancer   / 2023 ஜூன் 21 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

கதிர்காம ஆடி வேல்விழா உற்சவத்திற்காக காட்டுப் பாதையில் பாதயாத்திரை  சென்ற பெண்ணொருவர் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் பாதயாத்திரை ஆரம்பமாகி இரண்டாம் நாள் (13) நாவலடிக்கு அப்பால் நடுக்காட்டில் இடம் பெற்றுள்ளது.

குறித்த பெண் கதிர்காமத்திலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாவலடி  தீர்த்தக்கிணற்று பகுதியால் பயணித்தபோதே காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் 63 வயதுடைய மட்டக்களப்பை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர் .

இதேவேளை சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காட்டுப் பாதை கடந்த 12ஆம் திகதி திறக்கப்பட்ட நாள் முதல் பத்து நாட்கள் வரை இதுவரை ஆக ஒரேயொரு துர்ச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் செல்வச் சந்நதியிலிருந்து யாத்திரையை மேற்கொண்டு வந்த  யாத்திரீகர் ஒருவர் மாமாங்கத்தில் திடிரென காலமாகியது தெரிந்ததே. பறவைக்குளம் மற்றும் கதிரமலை கண்ட இடம் போன்ற இடங்களிலும் காட்டுயானைகளின் தலையீடு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X