2024 மே 03, வெள்ளிக்கிழமை

யானைகளிடமிருந்து தப்பியது குடும்பம்

Janu   / 2023 ஒக்டோபர் 17 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டு. வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நெல்லூரில் குடியிருப்பு பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை (17)  அதிகாலையில் உள்நுழைந்த காட்டு யானைகள் வீடுகளைத் துவசம் செய்துள்ளன. இதனால், இரண்டு வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

யானைகள் வீடுகளை இடித்து வீழ்த்திய நேரத்தில் தாங்கள் உறக்கத்தில் இருந்ததால் தெய்வாதீனமாக உயிர்தப்பினோம் என்றும் வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காட்டுயானை, தென்னை, மா, வாழைமரம் போன்ற மரங்களை முறித்துச் சேதப்படுத்தியதுடன், விவசாயத்தையும் நாசப்படுத்தியது. யானைகள் இரு வீடுகளைத் தாக்கி உடைத்தபோது, உறக்கத்தில் இருந்த 2 மாதக் குழந்தை, தாய் மற்றும் அடுத்த வீட்டில் உறக்கத்தில் இருந்த 4 சிறுவர்கள் உட்பட்ட குடும்பத்தினர் தெய்வாதீனமாக உயிர் தப்பி அங்கிருந்து ஓடியுள்ளனர்.

கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .