Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 16 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல், எஸ்.சபேசன்
மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேசத்துக்குட்பட்ட சின்னவத்தைக் கிராமத்தினுள் இன்று (16) அதிகாலை புகுந்த காட்டு யானைகள், அங்குள்ள குடிசை வீடுகளை உடைத்துள்ளதுடன், விஸ்வலிங்கம் சுபாஸ்கரன் (வயது 22) என்ற இளைஞனையும் தாக்கியுள்ளமையால், அவ்விளைஞன் படுகாயமடைந்த நிலையில், அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் கிராமத்தில் புகுந்த சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகளால் அங்குள்ள மக்கள் அல்லோல கல்லேலப்பட்டு, பீதியடைந்துள்ளனர்.
மேலும், நித்திரையில் தூங்கிக் கொண்டிருந்த சின்னவத்தை கிராமத்தை சேர்ந்த மேற்படி இளைஞனும், யானைகளின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
இதனையத்து, மக்கள் ஒன்றுதிரண்டு சத்தமிட்டும், தீப்பந்தம் ஏந்தியும், காட்டு யானைகளை ஒருவாறு கிராமத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
இந்நிலையில், யானைகள் அங்கிருந்த 4 குடிசை வீடுகளை உடைத்து அழித்துள்ளதுடன், உணவுக்காக வைத்திருந்த 13 நெல்மூடைகளையும், துவம்வம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக, கிராமவாசிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .