Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், தாய் நாட்டுக்காகத் தமது உயிரைத் தியாகம் செய்த அல்லது அதன்போது அங்கவீனமடைந்த படையினரதும் பொலிஸாரினதும் குடும்பங்களுக்கு, வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் “ரணவிரு சேவா”அதிகாரசபையால், மட்டக்களப்பு மாவட்டத்தில் 39 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக, அதிகாரசபையின் மாவட்ட அலுவலர் ரீ.எச். கீர்த்திகா ஜயவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று (17) கருத்துத் தெரிவித்த அவர், "யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது அங்கவீனமடைந்த படையினரிலும் பொலிஸாரிலும் தங்கி வாழ்ந்த 136 குடும்பங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வரை இனங்காணப்பட்டுள்ளன.
"இவர்களுக்கான சேமநலன்களை, “ரணவிரு சேவா” கவனித்து வருகின்றது. இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் “ரணவிரு சேவா” பயனாளிக் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டோருக்கான வீடமைப்புத் திட்டம், தற்போது அமுலாகிக் கொண்டிருக்கின்றது.
"ஒவ்வொன்றும் தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலமைந்த இந்த வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம், கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. தற்போது நிறைவுறும் தறுவாயிலுள்ள இந்த வீடுகள், நவம்பர் மாதம், பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன.
"வாழைச்சேனை, ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, பட்டிப்பளை, மங்களகம ஆகிய இடங்களில் 19 வீடுகள், தமிழ்ச் சமூகத்தைச் ரணவிரு குடும்பங்களுக்கும், 19 வீடுகள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ரணவிரு குடும்பங்களுக்கும், 1 வீடு சிங்களச் சமூகத்தைச் சேர்ந்த ரணவிரு குடும்பத்துக்கும் நிமாணிக்கப்பட்டு வருகின்றன.
"ரணவிரு குடும்பங்களின் சேவைகளை விஸ்தரிக்கும் நோக்கில், மேலும் தேவையுள்ள பயனாளிக் குடும்பங்களுக்கு வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன" என, கீர்த்திகா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .