2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ரயிலில் மோதி இளைஞன் பலி

வா.கிருஸ்ணா   / 2017 ஜூலை 20 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மாகோவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு, இளைஞனொருவன் உயிரிழந்துள்ளான் என, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, திராய்மடு பகுதியில், இன்று (20) பிற்பகல்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது 24 வயது மதிக்க தக்க இளைஞனே உயிரிழந்துள்ளான் எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், மட்டக்களப்பு ரயில் நிலையத்துக்கு ரயில் மூலமே கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டிருந்ததுடன் இதுதொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டனர்.

உயிரிழந்த இளைஞன், சிங்கள இளைஞனாக இருக்கலாம் என தெரிவித்த பொலிஸார், சிங்களத்தில் கடிதம் ஒன்றை எழுதிவிட்டே, அவர், ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார் எனவும் கூறினர்.

குறித்த இளைஞனின் பை ஒன்றுமட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்பான வேறு எந்த அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமும் அவரிடம் காணப்படவில்லையெனவும் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X