2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

விகிதாசார அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெற வேண்டும்

Niroshini   / 2016 ஜூன் 04 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்

கடந்தகாலங்களில் தேசிய மட்டரீதியாக அரச திணைக்கள மற்றும் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்காக மூவின மக்களும் விகிதாசார அடிப்படையில் ஆட்சேர்ப்பு முறைகளில் புறம்தள்ளப்பட்டிருந்ததாக வணிகத்துறை அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரும் பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“தான் கடந்த காலங்களில் பிரதியமைச்சராக இருந்த காலப்பகுதியில் அன்றைய ஜனாதிபதியிடம் சுங்கத்திணைக்களம், விமானப்போக்குவரத்து திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் போன்றவற்றில் ஆட்சேர்ப்பு முறையில்  விகிதாசார அடிப்படையில் ஆட்சேர்பு முறையினை செயற்படுத்துவதற்காக மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு குழுவினை அமைத்து அதற்கான அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டேன்.

பின்னர் ஆட்சிமாற்றத்தின் பின்னர் இந்த கோரிக்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த ஆட்சேர்ப்பு முறைகள் சரியான முறையில் நடைபெறும் என்று நம்பிக்கை இருக்கிறது. இன,மத, மொழி பேதமின்றி தகமையுடையவர்களுக்கு குறிப்பிடப்பட்ட திணைக்களங்களில் நிலவுகின்ற வெற்றிடங்களுக்கு அனைத்து மாவட்டங்களில் உள்ளவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இனிவரும் காலங்களில் இணைத்துக்கொள்ளப்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன” என்றார்.

மேலும், இதற்காக தேசிய ஆட்சேர்ப்பு குழு ஒன்றினை அமைத்து நாடாளுமன்றத்தில் அதற்கான அங்கிகாரத்தினை பெற்று நடைமுறைப்படுத்தும் படி கேட்டுள்ளதாகவும் இது சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதமூலம் தெரிவித்துள்ளதாகவும் இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X