2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

விசேட தேவையுடையோருக்கு கொடுப்பனவு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விசேட தேவையுடையோருக்கான மாதாந்த வாழ்வாதாரக் கொடுப்பனவு  இன்று வெள்ளிக்கிழமை காலை வழங்கப்பட்டது.

இதன்போது 104 பேருக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. மாதமொன்றுக்கு  ஒருவருக்கு 3,000 ரூபாய் படி  கடந்த நான்கு மாதங்களுக்கான கொடுப்பனவு 12,000 ரூபாய் வழங்கப்பட்டதாக  காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தர் திருமதி எஸ்.சிவநாயகம் தெரிவித்தார்.  

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட், காத்தான்குடி பிரதேச செயலக கணக்காளர் எஸ்.ரூபாகரன், காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தர் திருமதி எஸ்.சிவநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X