2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; இருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, ஆரையம்பதி நான்காம் கட்டைப்பகுதியில் திங்கட்கிழமை (15) மாலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர்  உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளும் சைக்கிளும் மோதி மின்சாரக்கம்பத்துடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பு.தயாபரன் (வயது 27) என்பவரே உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த பி.புஸ்பராஜா (வயது 25) மற்றும் சைக்கிளில் பயணித்த ஒல்லிக்குளம் பகுதியைச் சேர்ந்த ரஸீம் (வயது 44) படுகாயமடைந்தனர்.

இவர்கள் இருவரும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X