2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

விபத்தில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட இருவர் படுகாயம்

Gavitha   / 2016 ஜூன் 05 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹூஸைன்,எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு வாழைச்சேனை நாவலடிப் பகுதியில், நேற்று சனிக்கிழமை (04) இடம்பெற்ற விபத்தில் தம்பதியினர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்த இவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இதில் பாதிக்கப்பட்ட பெண் 6 மாத கர்ப்பிணி என்றும் தெரியவருகின்றனர்.

புதிய காத்தான்குடி-06, ஹொஸ்டல் வீதியைச் சேர்ந்த கே.எம்.என். றாபி (வயது 32), எல்.ஏ. ஹுஸ்னா (வயது 22) ஆகிய இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X