2025 மே 08, வியாழக்கிழமை

விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயம்

Thipaan   / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு- திருகோணமலை நெடுஞ்சாலையின் கொம்மாதுறைப் பிரதேசத்தில் முச்சக்கரவண்யொன்றும் காரொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இன்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் செங்கலடி கணபதிப்பிள்ளை கிரமத்தைச் சேர்ந்த எம்.சுதாகரன் (வயது 23) என்ற முச்சக்கரவண்டி சாரதியே படுகாயமடைந்துள்ளார்
 
செங்கலடியிலிருந்து சவாரி சென்ற முச்சக்கரவண்டி கொம்மாதுறை பிரதேசத்தில் உள்வீதிக்கு திரும்பும் வேளையில், எதிர்ப்பக்கத்தில் வந்த கார் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X