Niroshini / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
மாணவர்கள் மத்தியில் இன்புளுவன்சா எச்1என்1 வைரஸ் தொற்று தொடர்பாக அறிவூட்டும் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.
உள்ளூராட்சி வாரத்தையொட்டி ' ஆரோக்கியமான சமூகம் அபிவிருத்தியின் மூலம்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த ஊர்வலம் பொது நூலகத்தில் இருந்து ஆரம்பமாகி நகர மணிக்கூட்டக் கோபுரம் வரை சென்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார், உதவி ஆணையாளர் என்.தனஞ்சயன், சுகாதாரப் பரிசோதகர் என்.தேவநேசன், நகர வின்சன்ட், சிசிலியா மற்றும் ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலை, புனித மிக்கல் மற்றும் மத்திய கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago