2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 05 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

கழிவுகளை முறையற்ற முறையில் வீசுவதற்கு எதிரான மற்றும் அன்றாட கழிவுகளை முகாமைத்துவம் செய்வது பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் இன்று வியாழக்கிழமை (05) மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகளின் 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கழிவு முகாமைத்துவத்தை மட்டக்களப்பில் பேணுவது பற்றிய இந்த ஊர்வலம், டேபா மண்டபத்திலிருந்து ஆரம்பமாகியது.

அபிவிருத்திக்கான ஒன்றிணைவு, பொறுப்புள்ள இலங்கையர்களாவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின்போது, கழிவுகளை வீசாமல் கூடைகளில் சேகரிப்போம் எனப் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டன.

இதேவேளை,  ஐக்கிய நாடுகள் சபையின் 60ஆவது ஆண்டு நிறைவு தின விழா இன்றையதினம் மட்டக்களப்பில் கொண்டாடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X