Suganthini Ratnam / 2016 ஜூன் 29 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்.
போஷாக்கு மாதத்தினை முன்னிட்டு 'அழகான உடல் நலத்திற்கு அளவோடு உண்போம்' என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று புதன்கிழமை வாழைச்சேனை சுகாதார வைத்திய சேவை அலுவலகத்தினால் ஏற்பாடு நடத்தப்பட்டது.
வாழைச்சேனை இந்துக்கல்லூரி வளாகத்தில் இருந்து ஆரம்பமான மேற்படி விழிப்புணர்வு ஊர்வலமானது சுகாதார வைத்திய சேவை நிலையத்தினை சென்றடைந்தது.
இதன்போது பொதுமக்கள் உடலுக்கு சக்தியைத் தரும் உணவு உட்கொள்ளல், தயாரித்த உணவை விட இயற்கையான உணவுகளை கூடுதலாக உண்ணுங்கள், இலக்கறி உண்போம்; நோயை தவிர்ப்போம், இயற்கையான உணவுகளை தினமும் சாப்பிடுங்கள், குறைவான சீனி இனிப்பு அல்லது இனிப்பூட்டப்பட்ட பாணங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்பன போன்ற சலோகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு நடந்து சென்றனர்.
ஊர்வலத்தின் இறுதியின்போது பொதுமக்களுக்கான உடல் திணிவு சுட்டென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு திணிவு கூடியவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் திணிவு குறைந்தவர்களுக்கு சத்துணவு பாணங்கள் மற்றும் இலைக்கஞ்சி வழங்கி வைக்கப்;பட்டன.
இந்நிகழ்வில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஈ.சிறிநாத் இந்துக்கல்லுரிரி அதிபர் அ.ஜெயஜீவன் மற்றும் சுகாதார வைத்திய பரிசோதகர்கள் தாதியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான அனுசரனையை வாழைச்சேனை உலக தரிசன நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
4 hours ago