2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வாவியில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 03 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் அப்துல் மஜீத் மாவத்தையைச் சேர்ந்த 49 வயதுடைய மஹ்மூது லெப்பை அன்சார் என்பவர் இன்று வெள்ளிக்கிழமை வாவியில் தவறி விழுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கூலித் தொழிலாளியான இவர் அறுக்கப்பட்ட கோழிகளின் கழிவுகளை எடுத்துக்கொண்டு ஏறாவூர் வாவிக் கரையோரமாகவுள்ள குப்பைத் திடலில் கொட்டுவதற்காகச் சென்றுள்ளார்.

அவற்றைக் குப்பைத் திடலில் கொட்டிவிட்டு அருகிலுள்ள வாவியில் கோழிக் கழிவுகளை எடுத்துச் சென்ற சாக்குகளையும் கைகால்களையும் கழுவுவதற்குச் வாவிக் கரைக்குச் சென்று கழுவிக் கொண்டிருக்கும்போது மயங்கி வாவிக்குள் விழுந்துள்ளார்.

பின்னர் வாவியில் சடலம் ஒன்று ஒதுங்கியுள்ளமையைக் கண்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்  இவரது சடலத்தை உறவினர்கள் அடையாளம் காட்டினர்.

இந்தச் சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X