2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

விவசாயக் கண்காட்சியும் வியாபாரச் சந்தையும்

Suganthini Ratnam   / 2016 மே 31 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் யுனொப்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள சூழலைப் பாதுகாக்கும் 'விவசாயக் கண்காட்சியும் வியாபாரச் சந்தையும்' ஜுன்; முதலாம், இரண்டாம், மூன்றாம் திகதிகளில் மட்டக்களப்பு கல்லடிப்பாலச் சந்தை திறந்தவெளியில் முற்பகல் 10 மணி தொடக்கம் இரவு ஏழு மணிவரை நடைபெறவுள்ளது.  

இயற்கைச் சூழலை மாசுபடாமல் பாதுகாத்தல், உணவு நஞ்சாவதைத் தடுத்தல், உயிர் இனங்களைப் பாதுகாத்தல், சேதனப் பசளைப் பயன்பாடு மற்றும் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தல் எனும் கருப்பொருள்களில் நடைபெறவுள்ள இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசமாகும்.

பசுமை உலகை நோக்கிய செயற்பாடுகள் சம்பந்தமாக விழிப்புணர்வையும் அறிவையும் ஏற்படுத்தும் கண்காட்சிக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. சூழல் நலன் சார்ந்த மற்றும் ஆரோக்கியமான பொருட்களின் விற்பனையும் இடம்பெறவுள்ளன.  
இதன்போது, சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளும் மாணவர்களுக்கான கேள்வி, பதில் நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளதுடன், வெற்றி பெறுபவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X