Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஜனவரி 09 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி யுதாஜித்
மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது. அந்த மாற்றத்தை நோக்கியே மக்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த மாற்றத்தைக் கொடுக்க வேண்டிய கடப்பாடு ஈரோசுக்கு இருக்கின்றது. அந்த மாற்றத்தை உருவாக்க வேண்டும்; மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கங்களுக்காக வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பிரதேசங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) தனித்துவமாகக் களமிறங்குவதற்குத் தீர்மானித்திருக்கின்றது என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் பிரபாகரன் தெரிவித்தார்.
ஈரோஸ் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் (08) நடைபெற்ற ஒருங்கிணைப்புக்கான ஒன்றுகூடல் என்னும் கட்சியின் தோழர்களுடனான சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காலாகாலமமாக எமது தமிழ் மக்கள் நம்பிநம்பி ஏமாந்தவர்களே ஒழிய, எதையும் பெற்றுக் கொண்டதோ, சாதித்ததோ இல்லை. தற்போது தேர்தலென்றொரு மாயை உருவாகியுள்ளது. எனவே, எமது கட்சியினூடாக மக்களுக்கு காத்திரமான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், கணிசமான உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல்களை எதிர்கொள்ளறவுள்ளோம் என்றார்.
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025