Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 02 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம் நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான்
இந்துக் கோவில்களில் வழக்கமான பூஜைகள், வழிபாடுகள் மற்றும் திருவிழாக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையினருடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மாவட்ட கொவிட் 19 தடுப்புச் செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சுகாதார அமைச்சால் இதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போதைய கொவிட் 19 நிலைமையைக் கருத்திற்கொண்டு, இந்துக் கோவில்களில் வழமையாக இடம்பெறும் நித்திய பூஜைகள் மற்றும் வழிபாடுகளை அதிகபட்சமாக ஐந்து பேருடன் நடத்தலாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வருடாந்த திருவிழாக்களை, பொதுமக்களது பங்குபற்றுதலுடன் நடத்த முடியாதெனவும், அதிகபட்சமாக கோவில் பரிபாலன சபை உறுப்பினர்கள் 15 பேரின் பங்கேற்புடன் நடத்த முடியும்.
எனினும், குறித்த பகுதிக்கான சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் நடத்துவதற்கு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அனுமதியளித்துள்ளார் என மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
38 minute ago
44 minute ago
53 minute ago