2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வவுணதீவில் 31,438 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல், ஏ.எச்.ஏ. ஹுஸைன்,  எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு  - வவுணதீவு பிரதேசத்தில், இவ்வருடம் 31,438 ஏக்கர்   பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுணதீவு பிரதேச பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக் கூட்டம், வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சிறிய நீர்ப்பாசனம், மானாவாரிக் கண்டங்களின் பயிர்ச்செய்கை, உன்னிச்சைத் திட்டம், வலதுகரை வாய்க்கால், இடதுகரை வாய்க்கால் ஊடான பயிர்ச்செய்கை, கால்நடைகளை வெளியேற்றுதல் போன்ற  விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

இதன்போது உன்னிச்சைத் திட்டத்தின் கீழ், வலதுகரை வாய்க்கால் விஸ்தீரணம், ஆற்றுப்பாய்ச்சல், இடதுகரை வாய்க்கால் போன்றவற்றில் மொத்தமாக 15,179 ஏக்கரும் சிறிய நீர்ப்பாசனம், மானாவாரிக் கண்டங்களின் பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் 16,051 ஏக்கரும் மொத்தம்  31,438 ஏக்கர் இவ்வருட பெரும்போகச் செய்கைக்குப் பொருத்தமானது என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, இவ்வருட பெரும்போக விவசாய வேலைகள், நேற்று முன்தினம் (10) தொடக்கம்  இடம்பெறுவதுடன், காப்புறுதி செய்துகொள்வதற்கான இறுதித் திகதி 2019 நவம்பர் 10ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X