Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2018 ஜனவரி 25 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குப்பட்ட தோணிதாட்டமடு பகுதியில் யானைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தவகையில், தோணிதாட்டமடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(21) இரவு வேளையில், குறித்த குடியிருப்பு பகுதியில் முதுகில் பாரிய காயங்களுடன் உள் நுளைந்த காட்டு யானையொன்று, செவ்வாய்கிழமை(23) உயிரிழந்துள்ளது. இந்நிலையில் அதே பிரதேசத்தில் நேற்று(24)அதிகாலை மற்றுமொரு யானை உயிரிழந்து கிடப்பதாக பொதுமக்கள் கிராம சேவகருக்கு அறிவித்ததையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
குறித்த யானை இறந்தது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பிரதேச செயலகத்தால் அறிவித்துள்ள நிலையில், நேற்று(24) மாலை வரை யானையை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கப்படவில்லை எனவும், சுகாதார பிரச்சனை காரணமாக விரைவில் குறித்த யானையை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் கதிரவெளி பிரதான வீதியில் இருந்து சுமார் 20 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள எல்லைக் கிராமமான கட்டுமுறிவுக்குளம், தோணிதாட்டமடு, பனிச்சையடிகுளம் பிரதேசத்தில் வாழும் மக்கள் இதுவரையும் யானை பாதுகாப்பு வேலி இல்லாமலே வாழ்ந்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago