2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வாழைச்சேனை மீனவர்கள் அந்தமான் தீவில் கண்டுபிடிப்பு

Editorial   / 2022 நவம்பர் 28 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எச்.எம்.எம்.பர்ஸான்

செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆழ்கடலுக்குச் சென்று காணாமல் போன வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் அந்தமான் தீவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

காணாமல் போன மீனவர்கள் தொடர்பான தகவல் 64 நாட்களின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 4.30 மணியளவில் கிடைத்துள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அந்தமான் தீவிலிருந்த தமது தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்ததாகவும் அதில், மீனவர்கள் படகுடன் மீட்கப்பட்டு தற்போது கடல் பாதுகாப்பு படையின் பாதுகாப்பில் இருப்பதாகவும் தமக்கு தகவல் கிடைத்ததாக காணாமல் போன மீனவர் உமர்தீன் அசன் அலி என்பவரின் மகன் முஜாஹித் கூறினார்.

குறித்த தகவல் தொடர்பில்,  மீனவர் சங்கம் மற்றும் துறைமுக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் முஜாஹித் மேலும் தெரிவித்தார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X