2025 மே 19, திங்கட்கிழமை

வாழ்வாதாரத்தின் ஆதாரம் வெளியீடு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜனவரி 29 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் இரண்டரை வருட மாகாண ஆட்சிக் காலத்தின்போது அடிமட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட தங்குதிறனுள்ள வாழ்வாதாரத் திட்டங்கள் சம்பந்தமான அபிவிருத்திக் கையேடு, ஏறாவூரில் இன்று (29) வெளியிட்டு வைக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமதின் ஏறாவூர் அலுவலகத்தில், இணைப்புச் செயலாளர் ஏ. அப்துல் நாஸர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச முக்கியதஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

பிரதேச அபிவிருத்திக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நீடித்து நிலைக்கக் கூடிய வாழ்வாதாரத் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் என்பன வாழ்வாதாரத்தின் ஆதாரம் என்ற கையேட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X