2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

விசேட நடமாடும் சேவை

Mithuna   / 2024 ஜனவரி 21 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன் 

வெல்லாவெளி பிரதேச செயலக பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவுக்கு தேசிய அடையாள அட்டை அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான விசேட நடமாடும் சேவை திருப்பழுகாமம் கலாசார நிலையத்தில்  வௌ்ளிக்கிழமை (19)  பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது வன்னிநகர், மாவேற்குடா, வீரஞ்சேனை, பழுகாமம்-01, பழுகாமம்-02 மற்றும் விபுலானந்தபுரம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட அஸ்வெசுமக்கு தகுதியுள்ள இதுவரை அடையாள அட்டை இல்லாத பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளனர்.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன், குறித்த பிரிவுகளுக்குரிய கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி அலுவலர், சமூர்த்தி அபிவிருத்தி அலுவலர் உள்ளிட்ட தேசிய அடையாள அட்டைப் பிரிவு, பதிவாளர் பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .