Freelancer / 2024 பெப்ரவரி 17 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் தன்னாமுனையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை (16) இரவு காத்தான்குடியிலிருந்து ஏறாவூர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி தன்னாமுனையில் பட்டா ரக வாகனம் நேருக்கு நேராக மோதியத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டிவில் பயணித்த காத்தான்குடியைச் சேர்ந்த றஹீம் றியாஸ் என்பவர் உயிரிழந்ததுடன் முச்சக்கரவண்டி சாரதி, குழந்தை மற்றும் பெண் காயமடடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரது சடலம் பிரதேசப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர்ப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago