Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜனவரி 19 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு பாசிக்குடா பிரதான வீதி சந்தியில், வியாழக்கிழமை மாலை (18) முச்சக்கர வண்டி ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானதில், குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதுடன் மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென்று கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில், கல்குடாவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மு.சூரியகுமார் (வயது 37)என்பவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளாரென தெரிவித்த பொலிஸார், அதே இடத்தைச் சேர்ந்த ஜே.ஜெயதீபன் (வயது 40) என்பவர் கயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாரென்றும் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியானது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகிச் சென்று மின்கமபத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago