Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் விரல் அடையாளமிடும் நடவடிக்கை, இன்று (01) தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் பி.குணரெட்ணம் தெரிவித்தார்.
இதற்காக, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 29 சமுர்த்தி வங்கிகளிலும், அதேபோன்று 13 சமுர்த்தி மகா சங்கங்களிலும், விரல் அடையாளமிடும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து சமுர்த்தி உத்தியோகத்தர்களும் காரியாலயத்துக்குக் கடமைக்குச் சென்றால், அவர்கள் விரல் அடையாளமிடும் இயந்திரத்தில் தமது விரல் அடையாளத்தை வைத்து, வரவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
சமுர்த்தி வங்கிகள், சமுர்த்தி மகா சங்கங்கள் ஆகியவற்றிலும், வெளிக்களத்திலும் கடமைபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், முகாமையாளர்கள் அனைவரும், இந்த விரல் அடையாளமிடும் நடவடிக்கையைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சமுர்த்தி உத்தியோகத்தர்களின் கடமை ஒழுங்கு, வரவு நேரம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையிலேயே, இந்த விரல் அடையாளமிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .