2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வு பிரசாரத்தில் பொலிஸார் மும்முரம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய, 'போதையற்ற நாளையும் போதையற்ற நாடும்' எனும் விழிப்புணர்வுப் பிரசாரத்தில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனரென,  ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்  சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.

இத்தகைய போதைப் பொருட்கள் அற்றதோர் நாடு பிரசுர ஒட்டிப் பிரசாரம், மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் நகரத்தில் அமைந்துள்ள ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்  சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தலைமையில்  ஏறாவூர் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு உட்பட எறாவூர் பொலிஸாரால் இன்று (07) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பொதுப் போக்குவரத்து பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் போதைப்பொருள் பற்றிய ஆபத்தை விளக்கும் பிரசுர ஒட்டிகள்,  பொலிஸாரால் ஒட்டப்பட்டன.

சட்டமும் ஒழுங்கும் அமைச்சு மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவற்றின் அனுசரனையுடன் இந்தப் பிரசாரம் பொலிஸார் கூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

போதையற்ற தூய்மை நாடாக மாற்றுவதில் பொலிஸாருடன் நெருக்கமாக இணைந்து, பொதுமக்களும் பணியாற்றினால் எதிர்கால சந்ததியை போதைக்கு எதிரான சமூகமாக உருவாக்க முடியுமென, சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X