Princiya Dixci / 2021 ஜூன் 24 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
கொரோனா அறிகுறிகளுடன் வீடுகளில் இருந்து கொண்டு, சுய வைத்தியம் செய்யாமல், தங்களுடைய உயிர்களைப் பாதுகாக்க அனைவரும் முறையான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டிக்கொண்டார்.
அத்தோடு, கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால், அச்சம் கொள்ளாமல், உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் சுகாதார வைத்திய அதிகாரி வலியுறுத்தினார்.
7 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
10 Apr 2026