2025 மே 19, திங்கட்கிழமை

வீட்டுத் திட்டத்தை பார்வை

Editorial   / 2018 ஜனவரி 19 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை கிராமத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தை, மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்,  நேற்று  (18) பார்வையிட்டுள்ளார்.

மேற்படி பிரதேசத்தில், தேசிய வீடமைப்பு அதிகாரசபையால், தலா 5 இலட்சம் ரூபாய் செலவில் 25 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறன.

கடந்த கால யுத்தம் காரணமாக அழிந்துபோன இருப்பிடங்களையும், அதற்கான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், இந்த வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டுத்திட்டதைப் பார்வையிட்ட அரசாங்க அதிபர், பயனாளிகளுடனும் கலந்துரையாடியதுடன், வீடமைப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தினார்.

இதன்போது, அரசாங்க அதிபருடன் கலந்துரையாடிய பிரதேச மக்கள், தங்களது மேலதிக தேவைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

அவை தொடர்பிலான மேம்படுத்தல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்

இவ் விஜயத்தின் போது, கமநல சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம், கிராம சேவையாளர், சமூர்த்தி உத்தியோகத்தர் கிராம அபிவிருத்திச் சங்கம், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கச்சக் கொடி சுவாமி மலை உள்ளிட்ட பிரதேசங்கள், யுத்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X