Freelancer / 2022 மார்ச் 15 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரக்குளம் வயல்பகுதில் கொட்டகை ஒன்றில் வேளாண்மையை காவல் காத்துவந்த விவசாயி ஒருவர் நேற்று வெட்டுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
ஈரளக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயியான 54 வயதுடைய பரசுராமன் ஆறுமுகம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வயல் பகுதியில் உள்ள வேளாண்மை செய்கையை காட்டுமிருகங்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்து வயல்பகுதியில் அமைந்துள்ள கொட்டகைக்கு சென்ற நிலையில், வீடு திரும்பாத அவரை தேடியபோது கொட்டகையில் வெட்டுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸ் தடவியல் பிரிவு அழைக்கப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். (R)
6 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
10 Apr 2026