Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள 40ஆம் கிராமம் பிரதேசத்தில், கைவிடப்பட்ட காணியொன்றில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாக்கிகள் இரண்டை, விசேட அதிரடிப்படையினர் இன்று (01) மீட்டுள்ளனரென, வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
நிலத்தில் வெளியே துப்பாக்கி தெரிந்த நிலையில், அதைக் கண்டு பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அந்தப் பகுதிக்கு சென்ற பொலிஸார் பார்வையிட்டதுடன், துப்பாக்கி இருந்த பகுதியின் நிலப்பகுதியை மேலும் தோண்டி சோதனையிடுவதற்கு நீதிமன்ற உத்தரவு பெற்றனர்.
இதனையடுத்து, தாண்டியடி விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதியை தோண்டித் தேடுதலில் ஈடுபட்டனர்.
இதன்போது, பாவிக்க முடியாத நிலையில் இருந்த ரி56 ரக துப்பாகிகள் 2 மீட்டுள்ளன. இது கடந்த காலத்தில் விடுதலைப் புலிகனால் பாவிக்கப்பட்ட துப்பாக்கிகளாக இருக்கலாமென, பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
34 minute ago
44 minute ago
58 minute ago