2025 மே 09, வெள்ளிக்கிழமை

‘வெள்ளை வானுக்கு ஆதரவளிக்கக் கூடாது’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மீண்டும் வெள்ளை வான் கலாசாரத்தை ஏற்படுத்த ஆதரவளிக்க கூடாதெனத் தெரிவித்த கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக வந்தால், நாடு பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகும் நிலை ஏற்படுமென எச்சரித்தார்.

தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க சிலர் முற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் அவர்களின் விடயத்தில் சிறுபான்மை சமூகங்கள் கவனமாக நடந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

அவர், நேற்று (11) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஓர் அரசாங்கம் உருவாக்கப்படும் போது மக்களுடைய அபிலாசைகள் நிறைவேற்றுகின்ற மக்களின் அச்சங்களை போக்குகின்ற அரசாங்கமாக அது அமையவேண்டுமெனவும் அச்சத்தோடு பயந்து வாழுகின்ற அரசாங்கத்தை உருவாக்க முடியாதென்றும் தெரிவித்தார்.

நாட்டிலே நீதித்துறை, ஊடகத்துறை உட்பட மக்கள் அச்சத்திலே வாழுகின்ற அனைத்து விடயங்களும் மஹிந்த ஆட்சிக் காலத்திலே இருந்ததாகக் குற்றஞ்சாட்டிய அவர், கோட்டாபய  ஜனாதிபதியாக வருவாராக இருந்தால், உண்மையில் ஜனாதிபதியும் பிரதமரும் மஹிந்த ராஜபக்‌ஷவாகத்தான் இருப்பார் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்துமில்லையென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X