Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் உட்பட ஏழு ஊடகவியலாளர்கள் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மட்டக்களப்பு மாநகர சபைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு அரசடி வட்டாரத்தில் போட்டியிடுகின்றார்.
அதேபோன்று, மட்டக்களப்பு மாநகர சபையில் சுயேட்சைக்குழுவில் மட்டக்களப்பு கல்லடி வட்டாரத்தைப் பிரதிநித்துவப்படுத்தி உதயகுமார் உதயகாந்த், அமிர்தகழி வட்டாரத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தி அந்தேணி லியோன்ராஜ், இருதயபுரம் வட்டாரத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தி கணபதிப்பிள்ளை சசிக்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
காத்தான்குடி நகர சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜௌபர்கான், மீராபள்ளி வட்டாரத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தியும், ஜுனைத் எம். பஹத், மக்கள் விடுதலை முன்னணியில் அன்வர் வட்டாரத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தியும், மக்கள் விடுதலை முன்னணியில் ஹசனாத் வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஹபீப் முகம்மட் பாத்திமா சர்மிளா ஆகிய ஊடகவியலாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .