2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வைத்தியசாலையிலிருந்து வீடு சென்றவர் மரணம்

Freelancer   / 2023 ஜூலை 19 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் வீடு செல்லும் போது விபத்துக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.

இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (18) சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்து தானாக வெளியேறி தனது வீடு  நோக்கி  செல்லும் போது வாகனம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர் வாழைச்சேனை - செம்மண்ணோடை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய உசனார் வெள்ளைத்தம்பி என்பவராவார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .