2025 மே 12, திங்கட்கிழமை

ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகரில் தம்வசம் ஹெரோய்ளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வியாழக்கிழமை (11) கைதுசெய்யப்பட்ட இளைஞருக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
 
ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டுள்ளார் என்று பொதுமக்களிடம் இருந்து கிடைத்த துப்புத் தகவலின்படி இந்த இளைஞர், 360 மில்லிகிராம் ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
ஏறாவூர் பெண் சந்தை வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட அப்துல் கபூர் முஹம்மத் அம்ஜத் என்ற 19 வயதான இளைஞனே எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X