A.P.Mathan / 2013 ஜனவரி 16 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவற்றில் ஒன்று தான் நீழிவு நோயாளர்களுக்கு ஏற்படும் காயங்கள். இது தொடர்பில் அவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். பெரும்பாலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கட்டாயம் தமது உடம்பில் காயங்கள் ஏற்பாடத வண்ணம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதிலும் கால்களை மிகவும் உன்னிப்பாக ஒவ்வொரு நாளும் அவதானிக்க வேண்டும். காரணம் 5 வருடத்திற்கு மேல் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்குமாயின், அவர்களது பாதங்கள் பெரும்பாலும் விறைப்படைந்து உணர்ச்சியற்றதாகவே இருக்கும். எனவே கால்களில் முள்ளோ, கல்லோ குத்தி காயத்தை ஏற்படுத்துமாயின் அதனை அவர்களால் உணர்ந்துகொள்ள முடியாது. கால்களில் தான் காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். எனவே கால்களில் அவ்வாறு காயங்கள் ஏற்படாமல் எவ்வாறு தவிர்த்துக்கொள்ளலாம் என்பது பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
சிலருக்கு காயம் அல்லது புண் ஏற்பட்டு நீண்டகாலம் மாறாமல் இருக்குமாயின் அது தொடர்பில் உடனடியாக அவர்கள் வைத்திய ஆலோசனையை பெறுவதுதான் மிகவும் சிறந்தது. காரணம் நீரிழிவு நோயாளர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு நியுற்றிசியன்கள் குறைவாகவே தான் காணப்படும். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தியும் இயல்பாகவே அவர்களிடம் குறைவாகத்தான் இருக்கும். இதனால் தான் நீரிழிவு நோயாளர்களுக்கு ஏற்படும் புண்களோ காயங்களோ இலகுவில் மாறுவதில்லை.
எனவே பொதுவாகவே நீரிழிவு நோயாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் காயம் அல்லது புண் ஏற்படுமாயின் அதனை மாற்றுவது கொஞ்சம் கடினம் தான். அது நோயாளர்களதும் நோயினதும் தன்மையை பொறுத்தே தான் அமையும். 
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025