2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

உங்கள் சிறுநீரகத்திலும் கற்கள் உருவாகலாம்; அவதானமாக இருங்கள்

A.P.Mathan   / 2013 ஜனவரி 24 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


இன்று இலங்கையைப் பொறுத்தவரைக்கும் அதிகரித்துக் கொண்டு வரும் ஒரு நோயாக விளங்குவது தான் சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல் என்பது. இதனால் இளம்பராயத்தினர் இடுப்பு வலி, அடிவயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் எரிவு, மற்றும் அவ்வாறு கழிக்கும்போது இரத்தம் வருதல் போன்ற பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

இதற்கெல்லாம் மூலக்காரணம் சரியாக நீர் அருந்தாமையே ஆகும். ஆமாம் மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 3 – 4 லீற்றர் வரைக்குமான நீரை அருந்த வேண்டும். அது மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களில் எல்லாம் நீரில் அதிகளவாக கல்சியம் படிந்து காணப்படுகிறது. அந்நீரை அப்படியே பருகாது அதனை சூடாக்கி அந்நீரில் காணப்படும் கல்சியத்தின் செறிவைக் குறைத்தே அருந்த வேண்டும்.

உங்களுக்கு தொடர்ச்சியாக குளிர் காய்ச்சல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் மற்றும் இரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனே வைத்தியரை நாடுங்கள். காரணம் அது பெரும்பாலும் சிறுநீரகத்தில் கல் உருவாகி இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

அவ்வாறு இக்கல் உருவாகி சிறுநீர் அடைபடுமானால் அதனை வைத்தியர்கள் UltraSound Scan செய்து கற்கள் எந்த இடத்தில் அடைத்திருக்கின்றது என்பதனைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அல்லது சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு அச்சிறுநீரக கல்லினை சிறுநீரகத்திலிருந்து அகற்றுவார்கள்.

இதற்காக நீங்கள் பயப்பட தேவையில்லை. ஆனால் அலட்சியமாக இருக்காதீர்கள். காரணம் நீங்கள் தொடர்ச்சியாக அதனை கவனிக்காமல் இருப்பீர்களேயானால் அது சிறுநீரில் பற்றீரியா தொற்றை ஏற்படுத்தலாம். இதனால் சிறுநீரகம் சார்ந்த பல விளைவுகளை நீங்கள் எதிர்காலங்களில் எதிர்கொள்ள நேரிடலாம்.

இதனை முற்றாக நீங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமா? ஒரு நாளைக்கு 3-4 லீற்றர் வரைக்கும் நல்ல சுத்தமான நீரை அருந்துங்கள். இதனால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை மாத்திரமன்றி உங்கள் உடம்பில் ஏற்படும் பல நோய்களுக்கும் பிரச்சினைகளுக்கும் இலகுவான தீர்வினை நீங்களே பெற்றுக் கொள்ளலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .