2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

ஈரலின் தொழிற்பாட்டை சீராக பேணுவோம்!

Kogilavani   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித உடலில் இன்றியமையாத ஒன்றாக ஈரல் காணப்படுகின்றது. இன்று மனிதர்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக சர்க்கரை நோய் காணப்படுகின்றது. இத்தகைய நோய்களுக்கு ஈரலின் தொழிற்பாடே பிரதான காரணமாக அமைந்துள்ளது.

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ஈரலின் தொழிற்பாட்டினை சீராக பேணுவதன் மூலம் பல்வேறு வகையான நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துகொள்வது அவசியமாகும்.

ஈரலின் தொழிற்பாட்டை சிறப்பாக பேணுவதற்கு சில எளிமையான வழிகளை நித்தம் நாம் கடைபிடிப்பது முக்கியமானது.


கொடி எலுமிச்சை நீரை அருந்துங்கள்


ஒவ்வொரு நாளும் காலையில், எலுமிச்சை சாறு கலந்த நீரை ஒன்றரை (பெரிய) கிளாஸ் அருந்த வேண்டும்.  எலுமிச்சையானது  ஈரலில்; நஞ்சு அகற்றும் ஆற்றலை அதிகரிக்கும்.


நெருக்கமான இலை மரக்கறிகளை சாப்பிடுங்கள்


பீற்றூட், கரட், கோவா போன்றவற்றின் இலைகள் ஈரலை புதுப்பிக்கின்றன. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு தடவை இவற்றை உணவில் சேர்த்தகொள்வது அவசியமானது. வெங்காயம், உள்ளி  என்பவற்றை அதிகம் சாப்பிடுவதும் மிகவும் முக்கியமானது. ஏனெனில், இவற்றில் காணப்படும் சல்பரானது ஈரலின் தொழிற்பாட்டை மேம்படுத்தும்.


மஸாஜ் செய்தல்

நிமிர்ந்து படுத்தபடி பித்தப்பை மற்றும் ஈரல் பகுதியை மெதுவாக மஸாஜ் செய்யுங்கள்.  இவை உங்கள் உடலின் வலது பக்கத்தில் கீழ் நெஞ்செலும்பின் வழியே அமைந்துள்ளன.  இவ்வாறு மஸாஜ் செய்யும்போது அவை ஈரலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.


ஈரலுக்கு அளவுக்கதிகமான வேலை கொடுக்காதீர்கள்

மதுபானம் மற்றும் நோ குறைப்பு மருந்துகள் ஈரலுக்கு கடும் வேலையை கொடுக்கின்றன. சிறிதளவு நோ குறைப்பு மருந்துக்கூட ஈரல் செயலிழப்புக்கு காரணமாகியிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.


ஈரலுக்கு ஆதரவளிக்கும் குறைநிரப்பி உணவுகளை சாப்பிடுதல்


நாளென்றுக்கு 45 மில்லிக்கிராம் மஞ்சள் உட்கொள்வது நல்லது.


போதுமான அளவு கணிப்பொருட்களை உட்கொள்ளுங்கள்

மகனீசியம், கல்சியம், பொட்டாசியம்,  செப்பு, சோடியம், இரும்பு, மங்கனிஸ் என்பன ஈரலில் நஞ்சகற்றல் தொழிற்பாட்டை மேம்படுத்தும் கணிப்பொருட்களாகும். இவற்றை திரவவடிவில் எடுப்பது மிகச் சிறந்தது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X