2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கலாம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவது நம்மில் பலப்பேருக்குத் தெரியாது போய்விட்டது. இது நோயெதிர்ப்பு சக்தியையும் மற்றும் ஆற்றலையும் அதிகரிக்க வல்லதாகும்.

கொண்டைக்கடலையில் மாங்கனீஸ், தையமின், மக்னீசியம், பொஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

கொண்டைக்கடலையில் கிளைசீமிக்  இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும்  நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க இவை உதவி   செய்கிறது.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வைத் தடுக்க வல்லதாகும். கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ்   போன்றவற்றை  மிக எளிதாக தவிர்த்து விடலாம். மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரி செய்யவும்  இது உதவுகிறது.

இரத்த சோகைக்குச் சிறந்த உணவுப் பொருளாகவும் விளங்குகிறது. ஏனெனில் இதிலும் இரும்புச்சத்து அதிகம்  காணப்பகிறது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள்   கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் தான் காரணமாக விளங்குகிறது.

 மேலும் கொண்டைக்கடலையை அவித்து,  அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர, உடலுக்கு உறுதியை கொடுக்கும். கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும்  ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.

வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக் கடலையை தவிர்ப்பது நல்லது. இதனை அளவுக்கு அதிகமாக  உட்கொள்வது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். எனவே இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .