Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
முறையான உணவு பழக்கம் இன்மையே அதிகளவானோர் நோய்களினால் பாதிக்கப்படுவதற்கு முக்கியமான காரணமாக அமைகின்றது. அந்தவகையில் தற்போது சிறுநீரக கற்களினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்த சிறுநீரக கற்கள் சிறுநீரகத்தில் உள்ள சிறுநீரக தாரை,சிறுநீர்பை என்பவற்றிலேயே தோன்றுகிறது. சிறிய கற்களாக இருந்தால் சிறுநீர்தாரை வழியாக இலகுவில் வந்துவிடும், அது பெரிய கற்களாக இருப்பின் சிறுநீரக தாரையை அடைத்துக்கொண்டு அடிவயிறு, இடுப்பு என்பவற்றில் வலியை ஏற்படுத்தி சிறுநீரோடு இரத்தம் வெளியேறும்.
இதனை நிவர்த்தி செய்வதற்கு மக்காசோள இலைகள், பனங்கற்கண்டு. மக்காசோளத்தில் முடிபோன்று இருக்கும் இலைகளை எடுத்து, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர் இட்டு கொதிக்க வைக்கவேண்டும். இதனை தினமும் இருவேளை 100 மில்லி அளவுக்கு அருந்திவர சிறுநீரக கற்கள் இலகுவில் வெளியேறும்.
அதேபோன்று சிறு நெறிஞ்சிலின் இலை, வேர், பூ, வெட்டிவேர் , பனங்கற்கண்டு என்பவற்றை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனை நீரிலிட்டு கொதிக்க வைக்கவும் பின்னர் இதனை தினமும் அருந்தி வர சிறுநீரக நோய்கள் இலகுவில் குணமாகும்.
இவ்வாறு உங்களது அன்றாட உணவு பழக்கத்திலும் கூட கீழாநெல்லி,முள்ளங்கி, வாழை தண்டு ஆகியவற்றை பயன்படுத்தி வருவீர்களாயின் சிறுநீரக கற்கள் இருப்பின் அவை கரைந்து விடுவதுடன் நோயில்லாத வாழ்க்கையினையும் பெற்றுக்கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago
30 Apr 2025